உள்ளூர் செய்திகள்

சோழவரம் அருகே அரசு நிலத்தில் ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் இடிப்பு

Published On 2022-10-26 12:26 IST   |   Update On 2022-10-26 12:26:00 IST
  • அரசுக்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டி இருப்பதாக மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீசுக்கு புகார்கள் வந்தது.
  • பொக்லைன் எந்திரம் உதவியுடன் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட வீடுகளை இடித்து அகற்றி நிலத்தை மீட்டனர்.

சோழவரம் அடுத்த பூதூர் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டி இருப்பதாக மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீசுக்கு புகார்கள் வந்தது. அவரது உத்தரவின் பேரில் பொன்னேரி தாசில்தார் செல்வகுமார் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதையடுத்து மண்டல தாசில்தார் பாரதி வருவாய் ஆய்வாளர் சந்தானலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் ரவீந்திரன் ஆகியோர் பொக்லைன் எந்திரம் உதவியுடன் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட வீடுகளை இடித்து அகற்றி நிலத்தை மீட்டனர். பின்னர் அந்த இடத்தில் அரசுக்கு சொந்தமான இடம் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.

Similar News