உள்ளூர் செய்திகள்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிறந்த நாள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Published On 2022-09-26 09:48 GMT   |   Update On 2022-09-26 09:48 GMT
  • டாக்டர் மன்மோகன் சிங் ஆட்சி நிர்வாகத்தில் நிலைத் தன்மையை அளித்தார்.
  • பொது வாழ்வில் கண்ணியத்தைப் பேணினார்.

சென்னை:

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-

இந்திய நாட்டின் முன்னாள் பிரதமரும், மிகச் சிறந்த அறிஞருமான டாக்டர் மன்மோகன் சிங்குக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

டாக்டர் மன்மோகன் சிங் ஆட்சி நிர்வாகத்தில் நிலைத் தன்மையை அளித்தார், பொது வாழ்வில் கண்ணியத்தைப் பேணினார், வறுமையைப் பெருமளவில் குறைத்தார், இவை அனைத்தையும் பணிவின் சிகரமாக இருந்து அவர் சாதித்தார். அவர் நல்ல உடல்நலனும் மகிழ்ச்சியும் பெற்றுத் திகழ விழைகிறேன்.

இவ்வாறு அந்த பதிவில் கூறி உள்ளார்.

Tags:    

Similar News