உள்ளூர் செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் வரதட்சனை கொடுமை வழக்கில் தேடப்பட்டவர் கைது

Published On 2022-09-28 15:15 IST   |   Update On 2022-09-28 15:15:00 IST
  • ஸ்ரீநிவாஸ் போலீசிடம் சிக்காமல் இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.
  • ஐதராபாத்தில் உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஐதராபாத்தை சேர்ந்தவர் ஸ்ரீநிவாஸ். இவர் மீது கடந்த 2021-ம் ஆண்டு வரதட்சனை கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் ஸ்ரீநிவாஸ் போலீசிடம் சிக்காமல் இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.

இந்த நிலையில் ஸ்ரீநிவாஸ் இன்று அதிகாலை 4.30 மணிக்கு சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் பயணம் செய்ய வந்த ஸ்ரீநிவாசை விமான நிலைய அதிகாரிகள் கைது செய்தனர். இதுபற்றி ஐதராபாத்தில் உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் சிங்கப்பூர் விமானம் அரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

Similar News