உள்ளூர் செய்திகள்

மதுரையில் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த சொகுசு கார்- அரசு வக்கீல் உயிர் தப்பினார்

Published On 2022-08-23 09:15 GMT   |   Update On 2022-08-23 09:15 GMT
  • புதூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது திடீரென காரில் இருந்து கரும்புகை வெளியேறியது.
  • அதிர்ச்சி அடைந்த நிர்மல் குமார் உடனடியாக காரை நிறுத்தி விட்டு இறங்க முயன்றார். ஆனால் காரின் கதவுகளைத் திறக்க முடியவில்லை.

மதுரை:

மதுரை புதூரைச் சேர்ந்தவர் நிர்மல் குமார். இவர் மதுரை ஐகோர்ட்டில் அரசு சிறப்பு வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று இரவு பணி முடிந்து 11 மணி அளிவில் காரில் வீட்டுக்கு புறப்பட்டார்.

புதூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது திடீரென காரில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நிர்மல் குமார் உடனடியாக காரை நிறுத்தி விட்டு இறங்க முயன்றார். ஆனால் காரின் கதவுகளைத் திறக்க முடியவில்லை. இதையடுத்து நிர்மல் குமார் சமயோஜிதமாக முன்பக்க கண்ணாடியை உடைத்து வெளியே குதித்து உயிர் தப்பினார்.

இதற்கிடையே சொகுசு கார் தீப்பிடித்து மளமளவென எரிய தொடங்கியது. இது குறித்து தகவலறிந்து புதூர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் 1 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.

ஆனாலும் கார் முற்றிலும் சேதமானது. நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News