உள்ளூர் செய்திகள்

மேல்மருவத்தூரில் புத்தாண்டு விழா- ரூ.70 லட்சம் நலத்திட்ட உதவிகளை பங்காரு அடிகளார் வழங்கினார்

Published On 2023-01-02 07:45 GMT   |   Update On 2023-01-02 07:45 GMT
  • மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் புத்தாண்டு விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.
  • ஆன்மிக குரு பங்காரு அடிகளார் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.  

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் புத்தாண்டு விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.

புத்தாண்டு தினத்தை வரவேற்கும் விதமாக மங்கள இசை வாசிக்கப்பட்டு பக்தர்களின் கர ஒலியுடன் புத்தாண்டை வரவேற்று ஆதிபராசக்தி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

சித்தர் பீடம் வந்த ஆன்மிக குரு பங்காரு அடிகளாருக்கு கர்நாடக மாநில ஆன்மிக இயக்க பொறுப்பாளர்கள் பாத பூஜை செய்து வரவேற்றனர்.

இந்த புத்தாண்டையொட்டி ரூ.70 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆன்மிக குரு பங்காரு அடிகளார் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.  

பெங்களூர் ஜெய் தேவி மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் மருத்துவ நிதியுதவி, சங்கரா புற்றுநோய் நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம், 9 நபர்களுக்கு மடிக்கணினி, 18 நபர்களுக்கு தையல் இயந்திரம், 18 நபர்களுக்கு அறுவை சிகிச்சை எந்திரங்கள், 3 நபர்களுக்கு ஆட்டோக்கள், மருத்துவ மனைகளுக்கு நன்கொடைகள், சிறப்பு குழந்தைகளுக்கான அன்னை இல்லத்திற்கு ரூபாய் 2 லட்சம் நிதி உதவிக்கான காசோலை உள்ளிட்ட ரூ.70 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்த  நிகழ்ச்சியில் ஆன்மிக இயக்கத் துணைத் தலைவர் ஸ்ரீதேவி ரமேஷ், வழக்கறிஞர் அகத்தியன் கலந்து கொண்டனர். 

விழாவில் கலந்து கொண்ட லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கும் நிகழ்ச்சியை ஆன்மிக இயக்க துணை தலைவர் கோ.ப.செந் தில் குமார் தொடங்கி வைத்தார். 

Tags:    

Similar News