உள்ளூர் செய்திகள்

புதிய மின் இணைப்பு வழங்க ரூ.9 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது

Published On 2023-02-07 14:54 IST   |   Update On 2023-02-07 14:54:00 IST
  • மின்இணைப்பு வழங்க இத்ரீத்திடம் ரூ.9 ஆயிரம் லஞ்சம் வழங்க வேண்டும் என்று மின்வாரிய ஆய்வாளர் பாளையம் நெருக்கடி கொடுத்தார்.
  • லஞ்சம் கொடுக்க விரும்பாத இத்ரீத் இதுபற்றி திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார்.

ஆவடி:

ஆவடியை அடுத்த கோவில் பதாகையை சேர்ந்தவர் இத்ரீத். இவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். இதற்கு புதிய மின்இணைப்பு வழங்க திருமுல்லைவாயிலில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் கோரிக்கை விடுத்து இருந்தார்.

ஆனால் மின்இணைப்பு வழங்க இத்ரீத்திடம் ரூ.9 ஆயிரம் லஞ்சம் வழங்க வேண்டும் என்று மின்வாரிய ஆய்வாளர் பாளையம் நெருக்கடி கொடுத்தார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத இத்ரீத் இதுபற்றி திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார்.

லஞ்சஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தல்படி இன்று காலை ரசாயன பவுடர் தடவிய ரூ. 9 ஆயிரத்தை இத்ரீத், மின்வாரிய ஆய்வாளர் பாளையத்திடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்சஒழிப்பு டி.எஸ்.பி கலைச்செல்வன் மற்றும் அதிகாரிகள் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஆய்வாளர் பாளையத்தை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News