உள்ளூர் செய்திகள்
ஆவடி மாநகர காங்கிரஸ் மாவட்டத்தலைவராக இ.யுவராஜ் நியமனம்
- மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்ட யுவராஜ், மாநிலத்தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட மாநில நிர்வாகிகளை வெள்ளிக்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
- இ.யுவராஜை ஆவடி மாநகர பகுதித்தலைவர்கள், நிர்வாகிகள் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
ஆவடி மாநகர் காங்கிரஸ் கமிட்டியின் மாவட்டத்தலைவராக இ.யுவராஜை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுக்செயலர் கே.சி.வேணுகோபால் எம்.பி நியமித்துள்ளார்.
இதற்கு முன்பு, இவர் ஆவடி மாநகர வடக்கு பகுதித்தலைவராக பதவி வகித்து வந்தார். இதற்கிடையில் மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்ட யுவராஜ், மாநிலத்தலைவர் கே.எஸ்.அழகிரி, செயல் தலைவர் கே.ஜெயக்குமார் எம்.பி. உள்ளிட்ட மாநில நிர்வாகிகளை வெள்ளிக்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
மாவட்டத்தலைவர் இ.யுவராஜை ஆவடி மாநகர பகுதித்தலைவர்கள், நிர்வாகிகள், திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.