உள்ளூர் செய்திகள்
மதுரவாயல் அருகே ஆட்டோ டிரைவரை கத்தியால் வெட்டி செல்போன் பறிப்பு
- பம்மல், அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் ஆட்டோ டிரைவர்.
- மதுரவாயல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:
பம்மல், அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர்(36). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று இரவு 11மணி அளவில் மதுரவாயல் அடுத்த போரூர் கார்டன் வழியாக ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3பேர் கும்பல் பாஸ்கரை வழி மறித்து கத்தியால் வெட்டி அவரது செல்போனை பறித்து தப்பி சென்றுவிட்டனர்.
சின்ன நொளம்பூர் பகுதியை சேர்ந்தவர் நிகில்(32) பிரபல தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணி புரிந்து வருகிறார். இவர் இன்று காலை 7மணி அளவில் மதுரவாயல் ஏரிக்கரை பஸ் நிறுத்தத்தில் பஸ்சுகாக காத்து நின்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் நிகிலின் கையில் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து மதுரவாயல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.