உள்ளூர் செய்திகள்

நெற்குன்றத்தில் கொலை வழக்கில் கைதானவர் ஜாமீனில் வந்து தலைமறைவான குற்றவாளி 2 ஆண்டுகளுக்கு பிறகு கைது

Published On 2022-11-22 13:53 IST   |   Update On 2022-11-22 13:54:00 IST
  • கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதம் தனஞ்செழியன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து நாராயணனை வெட்டி கொலை செய்தார்.
  • தனஞ்செழியன் அவனது கூட்டாளிகள் உட்பட 12பேரை கோயம்பேடு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

போரூர்:

நெற்குன்றம் சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் நாராயணன். பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் அதே பகுதி சி.டி.என் நகர் பகுதியை சேர்ந்த தனஞ்செழியன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் காரணமாக அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதம் தனஞ்செழியன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து நாராயணனை வெட்டி கொலை செய்தார். இவ்வழக்கில் தனஞ்செழியன் அவனது கூட்டாளிகள் உட்பட 12பேரை கோயம்பேடு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஜாமீனில் வெளியே வந்த தனஞ்செழியன் பின்னர் வழக்கில் ஆஜராகாமல் திடீரென தலைமறைவாகிவிட்டார். கடந்த 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் அரூரில் பதுங்கி இருந்த தனஞ்செழியனை இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், சப்-இன்ஸ்பெக்டர் அர்சுனன் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

Similar News