உள்ளூர் செய்திகள்
அம்பத்தூரில் ரெயிலில் கஞ்சா கடத்தி வந்த கேரள வாலிபர் கைது
- ஒடிசா மாநிலத்தில் இருந்து சென்னைக்கு ரெயில் மூலம் கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது.
- போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
அம்பத்தூரில் உள்ள டெலிபோன் அலுவலகம் அருகே சந்தேகத்திற்கிடமாக சுற்றிய வாலிபரிடம் மதுவிலக்கு புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் டில்லிபாபு தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அவர் வைத்திருந்த பையில் 10 கிலோ கஞ்சா இருந்தது. விசாரணையில் அவர் கேரளமாநிலத்தை சேர்ந்த விஷ்ணு(31) என்பதும், ஒடிசா மாநிலத்தில் இருந்து சென்னைக்கு ரெயில் மூலம் கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து விஷ்ணுவை போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.