உள்ளூர் செய்திகள்

கோவை மாநகராட்சி கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு

Update: 2022-06-30 11:17 GMT
  • அ.தி.மு.க. கவுன்சிலர்கள், மேயரின் வீட்டிற்கு பெயிண்ட் அடிக்க ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டதை கண்டித்து கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
  • பின்னர் மாநகராட்சி வளாகம் முன்பு தரையில் அமர்ந்து கைகளில் பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை:

கோவை மாநகராட்சி வளாகத்தில் உள்ள விக்டோரியா அரங்கில் மாநகராட்சி சாதாரண கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்க கவுன்சிலர்கள் வந்தனர். அ.தி.மு.க. கவுன்சிலர்களான பிரபாகரன், ஷர்மிளா சந்திரசேகர், ரமேஷ் ஆகியோரும் வந்தனர்.

அவர்கள் மேயரின் வீட்டிற்கு பெயிண்ட் அடிக்க ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டதை கண்டித்து கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் மாநகராட்சி வளாகம் முன்பு தரையில் அமர்ந்து கைகளில் பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த பதாகைகளில், ஊழல் ஊழல் ஊழல் நடக்குதுங்கோ நடக்குதுங்கோ கோடியில் மேயர் வீடு சுண்ணாம்பு அடிக்கிறாங்கோ மக்கள் வரிப்பணம் விரயம் ஆகுதுங்கோ விரயம் ஆகுதுங்கோ என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது.

Tags:    

Similar News