உள்ளூர் செய்திகள்
மாமல்லபுரத்தில் போக்குவரத்து விதிமீறிய 81 பேருக்கு அபராதம்
- போக்குவரத்து விதி மீறி வருவோரிடம் மாமல்லபுரம் போலீசார் நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கின்றனர்.
- புராதன சின்னங்கள் போன்ற முக்கிய சுற்றுலா பகுதிகளில் கார்களை நிறுத்தினால் அதற்கு “வீல் லாக்” போட்டு ஆன்லைனில் அபராதம் கட்ட ரசீது கொடுக்கப்படுகிறது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் கார்களில் சீட் பெல்ட் போடாமலும், பைக்குகளில் ஹெல்மெட் அணியாமலும் போக்குவரத்து விதி மீறி வருவோரிடம் மாமல்லபுரம் போலீசார் நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கின்றனர். திருவிடந்தை சோதனை சாவடியில் 51பேர், மாமல்லபுரம் நுழைவு வாயிலில் 30பேர் என 81 பேருக்கு அபராதம் விதித்தனர். நகரின் முக்கிய வீதிகளான பஸ் நிலையம், தலசயன பெருமாள் கோவில், புராதன சின்னங்கள் போன்ற முக்கிய சுற்றுலா பகுதிகளில் கார்களை நிறுத்தினால் அதற்கு "வீல் லாக்" போட்டு ஆன்லைனில் அபராதம் கட்ட ரசீது கொடுக்கப்படுகிறது.