உள்ளூர் செய்திகள்

திருக்கழுகுன்றம் அருகே வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்த 8 குரங்குகள் கூண்டுக்குள் சிக்கியது

Published On 2022-11-28 10:04 GMT   |   Update On 2022-11-28 10:04 GMT
  • குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து சமையல் பொருட்களை சேதப்படுத்துவதும், விவசாய விளை நிலங்களில் பயிர்களை தின்பதும் என பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது.
  • ஊராட்சி துணை தலைவர் கோவிந்தசாமி செங்கல்பட்டு வனத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தார்.

மாமல்லபுரம்:

திருக்கழுகுன்றம் அருகே உள்ள எச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட மாதா கோவில் தெரு, லிங்காபுரம், முத்துமாரியம்மன் கோவில் தெரு, கெங்கையம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து சமையல் பொருட்களை சேதப்படுத்துவதும், விவசாய விளை நிலங்களில் பயிர்களை தின்பதும் என பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது.

இதுகுறித்து ஊராட்சி துணை தலைவர் கோவிந்தசாமி செங்கல்பட்டு வனத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தார். இதையடுத்து வனத்துறை அலுவலர் கமலாசனன், வனக்காப்பாளர் ஏழுமலை உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு உள்ளூர் மக்கள் உதவியுடன், இரும்பு கூண்டுக்குள் நிலக்கடலை, வாழைப்பழம், தக்காளி போன்ற பொருட்களை வைத்து 8 குரங்குகளை பிடித்தனர்.

பின்னர் அவைகளை பாதுகாப்பாக, சிங்கபெருமாள் கோவில் அடுத்த அனுமந்தபுரம் காட்டுக்குள் கொண்டு விட்டனர். இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.

Tags:    

Similar News