உள்ளூர் செய்திகள்
மாமல்லபுரம் பேரூராட்சி சார்பில் 6,000 வீடுகளுக்கு இலவசமாக தேசிய கொடி
- மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் அப்பகுதியில் உள்ள 6,000 வீடுகளுக்கு இலவசமாக கைத்தறி துணியிலான தேசிய கொடி வழங்க முடிவு செய்தது.
- இதையடுத்து இன்று முதல் கொடிகளை பேரூராட்சி ஊழியர்கள் வீடுதோறும் இலவசமாக வழங்கி வருகிறார்கள்.
மாமல்லபுரம்:
இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளதை கொண்டாடும் வகையில், வீடுகள் தோறும் மக்கள் ஆக. 13 முதல் 15 வரை தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதனால் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என அனைத்து அலுவலகங்களும் அதற்கான பணிகளை பல்வேறு வகைகளில் செய்து வருகிறது.
இந்த நிலையில் மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் அப்பகுதியில் உள்ள 6,000 வீடுகளுக்கு இலவசமாக கைத்தறி துணியிலான தேசிய கொடி வழங்க முடிவு செய்தது.
இதையடுத்து இன்று முதல் கொடிகளை பேரூராட்சி ஊழியர்கள் வீடுதோறும் இலவசமாக வழங்கி வருகிறார்கள்.