உள்ளூர் செய்திகள்

பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினம்: பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் போலீசார்

Published On 2022-09-10 09:56 GMT   |   Update On 2022-09-10 09:56 GMT
  • பரமக்குடியில் நாளை இமானுவேல் சேகரன் நினைவு அஞ்சலி செலுத்த வருபவர்கள் போலீசாரின் அறிவுரைப்படி அனுமதி பெற்ற சாலை வழியாக வந்து செல்ல வேண்டும்.
  • மாவட்டம் முழுவதும் 2 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

பரமக்குடியில் நாளை இமானுவேல் சேகரன் நினைவு அஞ்சலி செலுத்த வருபவர்கள் போலீசாரின் அறிவுரைப்படி அனுமதி பெற்ற சாலை வழியாக வந்து செல்ல வேண்டும். மாவட்டம் முழுவதும் 2 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.

அஞ்சலி செலுத்த வருபவர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. எந்த பகுதியிலும் சிறிய பிரச்சினை வராமல் தடுக்கும் வகையில் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அரசு போக்குவரத்து கழகம் மூலம் பரமக்குடிக்கு கூடுதல் பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 1500 போலீசாருடன் பிற மாவட்டங்களைச் சேர்ந்த 3500 போலீசார் வரவழைக்கப்பட்டு 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

நினைவு தின நிகழ்ச்சி அனைவரின் ஒத்துழைப்புடன் எந்தவித இடையூறும் இன்றி அமைதியாக நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News