திருவொற்றியூரில் ரெயில்களில் வடமாநிலத்தவர்களை குறிவைத்து செல்போன்-பணம் பறித்த 4 திருநங்கைகள் கைது
- போலீஸ் இன்ஸ்பெக்டர் துளசிங்கம் தலைமையில் ரெயில்வே போலீசார் விரைவு ரெயிலில் ஏறி சோதனை செய்தனர்.
- ரெயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து 4 திருநங்கைகளையும் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.5 ஆயிரம் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தனர்.
திருவொற்றியூர்:
சென்னையில் இருந்து வடமாநிலங்களுக்கு செல்லக்கூடிய விரைவு ரெயில்களில் பயணம் செய்யும் வடமாநிலத்தவர்களிடம் சமீப காலமாக திருநங்கைகள் செல்போன் மற்றும் பணம் பறிப்பில் ஈடுபடுவதாக தொடர்ந்து ரெயில்வே போலீசாருக்கு ஆன்லைன் மூலம் புகார் வந்தது.
இந்த நிலையில் நேற்று காலை பெங்களூரில் இருந்து அசாம் செல்லக் கூடிய கவுகாத்தி விரைவு ரெயில் சென்னை பெரம்பூர் வழியாக திருவொற்றியூர் வந்தடைந்தது. வ.உ.சி நகர் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் துளசிங்கம் தலைமையில் ரெயில்வே போலீசார் விரைவு ரெயிலில் ஏறி சோதனை செய்தனர்.
அப்போது 4 திருநங்கைகள் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்தது தெரிய வந்தது. அவர்கள் திருவொற்றியூரை சேர்ந்த திருநங்கைகள் பவானி (வயது 26) ராதா (48) நக்மா (28) அஞ்சலி (26) என்பதும், அவர்கள் 4 பேரும் பெரம்பூர் ரெயில் நிலையத்தில் ரெயிலில் பயணம் செய்யும் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களை குறி வைத்து தொடர்ந்து செல்போன், பணம் பறிப்பில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து ரெயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து 4 திருநங்கைகளையும் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.5 ஆயிரம் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தனர்.