உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிள் திருடிய 3 பேர் கைது 

Published On 2022-12-21 12:29 IST   |   Update On 2022-12-21 12:29:00 IST
  • மீஞ்சூர் அடுத்த வல்லூரை சேர்ந்தவர் ஷேக் முகமது சல்மான்.
  • வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த இவரது மோட்டார் சைக்கிள் திருடு போனது.

மீஞ்சூர் அடுத்த வல்லூரை சேர்ந்தவர் ஷேக் முகமது சல்மான். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.கடந்த 16-ந் தேதி இரவு வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த இவரது மோட்டார் சைக்கிள் திருடு போனது.

இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் விசாரித்தனர். இது தொடர்பாக சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த சஞ்சய், புளியந்தோப்பை சேர்ந்த ஆரோக்கியதாஸ்,கொண்டித் தோப்பை சேர்ந்த தனுஷ் குமார் , ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

Similar News