உள்ளூர் செய்திகள்
திருவள்ளூர் அருகே தொடர்ந்து குற்றசெயல் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
- குமாரச்சேரி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் வசந்தகுமார்.
- பாடியநல்லூர் பகுதியை சேர்ந்த ராகுல் என்பவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கம் அருகே உள்ள குமாரச்சேரி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் வசந்தகுமார் (22). இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு அடிதடி வழக்கில்மப்பேடு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் ஏற்கனவே கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர் என தெரியவந்தது.
இதை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பா.சீபாஸ் கல்யாணின் பரிந்துரையின் படி மாவட்ட கலெக்டர்ஆல்பி ஜான் வர்கீஸ், தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்ட வசந்தகுமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதேபோல் பாடியநல்லூர் பகுதியை சேர்ந்த ராகுல் (24) என்பவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.