உள்ளூர் செய்திகள்
ஆந்திரா நீர்வீழ்ச்சிக்கு சென்றபோது பூந்தமல்லியை சேர்ந்த 2 பேர் விபத்தில் பலி
- உப்பளமடுகு பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் அங்குள்ள கோவிலின் மீது மோதியது.
- போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பூந்தமல்லியை சேர்ந்தவர்கள் யுவராஜ், விஸ்வா. நண்பர்களான இருவரும் ஆந்திர மாநிலம் காளகஸ்தி அருகே உள்ள நீர்வீழ்ச்சிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். காளகஸ்தி அருகே உப்பளமடுகு பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் அங்குள்ள கோவிலின் மீது மோதியது.
இந்த விபத்தில் யுவராஜ், விஸ்வா ஆகிய 2பேரும் பலத்த காயம்அடைந்து பலியானார்கள். இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.