உள்ளூர் செய்திகள்
மதுரவாயல் அருகே செல்போன் பறிப்பில் ஈடுபட்ட அண்ணன்-தம்பி கைது
- சகோதரர்கள் இருவரும் சேர்ந்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:
மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் பகுதியில் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் வந்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டு தப்ப முயன்ற 2பேரை அங்கிருந்த பொதுமக்கள் விரட்டி பிடித்து தர்ம அடி கொடுத்து மதுரவாயல் போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர்கள் வளசரவாக்கம் பகுதியை சேர்ந்த சஞ்சய் மற்றும் அவனது 18வயதுக்கு உட்பட்ட தம்பி என்பது தெரிந்தது. சகோதரர்கள் இருவரும் சேர்ந்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டு உள்ளனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்போன், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.