உள்ளூர் செய்திகள்
காஞ்சிபுரத்தில் 18, 25-ந் தேதிகளில் வாக்காளர் அட்டைகள், ஆதார் எண்ணுடன் இணைக்கும் முகாம்
வாக்காளர் அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
காஞ்சிபுரம்:
வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி இந்திய தேர்தல் ஆணையத்தால் தொடங்கி செயல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகின்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிக்கான முகாம் நாளை (18-ந் தேதி) மற்றும் 25-ந் தேதியில் நடைபெற உள்ளது என்று காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.