உள்ளூர் செய்திகள்

மரக்காணம் அருகே உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.1.50 லட்சம் பறிமுதல்

Published On 2024-03-22 11:40 IST   |   Update On 2024-03-22 11:41:00 IST
  • பறக்கும் படையினர் திண்டிவனம்-புதுச்சேரி பைபாஸ் சாலையில் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர்.
  • பணத்தை கொண்டு வந்த கணேசிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

மரக்காணம்:

வானூர் சட்டமன்ற தொகுதிக்கான பறக்கும் படையினர் வட்டார வளர்ச்சி அலுவலர் மகேந்திரவரன் தலைமையில் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார் கொண்ட தேர்தல் பறக்கும் படையினர் திண்டிவனம்-புதுச்சேரி பைபாஸ் சாலையில் தீவிர வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது சென்னை அய்யப்பன் தாங்கல் சீனிவாசபுரம் எம்.ஜி.ஆர் நகர் எட்டியப்பன் மகன் கணேஷ் என்பவர் தனக்கு சொந்தமான காரில் புதுச்சேரியை நோக்கி வந்து கொண்டிருந்தார். அவரது காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.

சோதனையில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் பணம் வைத்திருந்தது தெரியவந்தது. பணத்தை எதற்காக எங்கிருந்து கொண்டு செல்கிறீர்கள் என்று கேட்டதற்கு அவரிடம் எவ்வித பதிலும் இல்லை மேலும் இந்த பணத்திற்கு எவ்வித ஆவணமும் இல்லாததால் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வானூர் தேர்தல் அலுவலர் தாசில்தாரிடம் ஒப்படைத்தனர். பணத்தை கொண்டு வந்த கணேசிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News