உள்ளூர் செய்திகள்

சேலம் சரகத்தில் 12 போலி டாக்டர்கள் கைது

Published On 2023-04-11 11:17 IST   |   Update On 2023-04-11 11:17:00 IST
  • அனுபவ அடிப்படையில், ஆங்கில மருத்துவம் பார்க்கும் நபர்கள் மீது, நடவடிக்கை எடுக்க போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
  • தர்மபுரி மாவட்டத்தில் நல்லாம்பள்ளி வன்னியர் தெருவை சேர்ந்த முருகேசன் (62), மல்லிகுந்தம் முனுசாமி (63) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலம்:

சேலம் சரகத்தில் முறையாக மருத்துவ படிப்பு படிக்காமல், ஏதாவது ஒரு டாக்டரிடம் உதவியாளராக பணிபுரிந்து, அந்த அனுபவ அடிப்படையில், ஆங்கில மருத்துவம் பார்க்கும் நபர்கள் மீது, நடவடிக்கை எடுக்க போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளிடம் போலி டாக்டர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்குமாறு கூறி பல்வேறு ஆலோசனைகளும் வழங்கினார்.

அதன்படி சேலம் மாவட்டத்தில் சங்ககிரி வி.என்.பாளையம் பன்னீர்செல்வம் (வயது 63), வைகுந்தம் தேவராஜன் (67), ஓமலூர் கச்சேரி தெரு மணிகண்டன் (38), சக்கரைசெட்டிப்பட்டி வாசுதேவன் (46), ஆர்.சி.செட்டிப்பட்டி ஆன்ட்ரோஸ் (40) ஆகிய 5 போலி டாக்டர்களை போலீசார் கைது செய்தனர்.

அதுபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூர் குருவிநாயன்பள்ளி பசவண்கோவில் நதீம் (25), திருப்பத்தூர் தாலுகா தொக்கியம் குண்டலமலையூர் கோவிந்தராஜ் (50), பர்கூர் ஜெகதேவ் ரோடு மிதுன்குமார் (27), பெரிய மோட்டூர் கோவிந்தன் கொட்டாய் குப்புராஜ் (48), பாகலூரில் பெங்களூருவை சேர்ந்த முகமது சபீ (70) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

தர்மபுரி மாவட்டத்தில் நல்லாம்பள்ளி வன்னியர் தெருவை சேர்ந்த முருகேசன் (62), மல்லிகுந்தம் முனுசாமி (63) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 1-ந் தேதி முதல் இன்று வரை மொத்தம் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News