உள்ளூர் செய்திகள்

பொன்னேரி அருகே 104 வயது மூதாட்டி மரணம்- ஒரே குடும்பத்தில் 22 பேர் உள்ளனர்

Update: 2022-12-07 11:24 GMT
  • ராஜகனிக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.
  • ராஜகனியின் உடல் அதே பகுதியில் உள்ள இடு காட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

பொன்னேரி:

பொன்னேரி அடுத்த சின்ன காவனம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜகனி (வயது104). இவருக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். ராஜகனியின் கணவர் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

இதையடுத்து ராஜகனி கூலிவேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்தார். பின்னர் வயது முதிர்வு காரணமாக அவர் தனது இளைய மகன் அர்ஜுனன் வீட்டில் வசித்தார். ஐந்து தலைமுறை கண்ட ராஜகனிக்கு பேரன், பேத்திகள், கொள்ளு பேரன், கொள்ளுபேத்திகள் என அவரது குடும்பத்தில் மொத்தம் 22 பேர் உள்ளனர்.

மூதாட்டி ராஜகனி உடலில் எந்த பிரச்சினையும் இல்லாமல் தனது வேலைகளை தானே செய்து வந்தார். இதற்கிடையே நேற்றுமுன்தினம் ராஜகனிக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. அவரை குடும்பத்தினர் கவனித்து வந்தனர். இந்த நிலையில் ராஜகனி இறந்து போனார். அவரது இறுதி நிகழ்ச்சியில் குடும்பத்தினர் அனைவரும் பங்கேற்றனர். 104 வயது வரை அவர் உடலில் எந்த நோய் பிரச்சினையும் இல்லாமல் இருந்ததை அவரது குடும்பத்தினர் நினைவு கூர்ந்தனர். ராஜகனியின் உடல் அதே பகுதியில் உள்ள இடு காட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

Similar News