உள்ளூர் செய்திகள்

டேக்வாண்டோ போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீரருக்கு தருமபுரியில் உற்சாக வரவேற்பு அளித்த போது எடுத்த படம்.

டேக்வாண்டோ போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீரருக்கு தருமபுரியில் உற்சாக வரவேற்பு

Published On 2022-08-16 10:25 GMT   |   Update On 2022-08-16 10:25 GMT
  • இந்த போட்டியில் இந்தியாவில் இருந்து வீரர்கள் 20 பேர் கலந்து கொண்டனர்.
  • தங்கம் வென்ற வீரனுக்கு பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

தருமபுரி,

தருமபுரியைச் சேர்ந்தவர் தீபன் சக்கரவர்த்தி 27. இவர் பெங்களூருவில் சாப்ட்வேர் இன்ஜினியர் ஆக பணிபுரிந்து வருகிறார். கடந்த 15 ஆண்டுகளாக டேக்வாண்டோ பயிற்சி பெற்று 2019 மற்றும் 2022-ல் இருமுறை சர்வதேச அளவில் பதக்கம் பெற்றுள்ளார். சமீபத்தில் பெங்களூருவில் நடந்த தேசிய அலுவலக டேக்வாண்டோ போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணிக்கு தேர்வானார்.

இதனையடுத்து சர்வதேச அளவிலான 14வது சிகே கிளாசிக் இன்டர்நேஷனல் ஓபன் டேக்வாண்டோ போட்டி மலேசியாவில் 4 நாட்கள் நடந்தது.

இந்த போட்டியில் இந்தியாவில் இருந்து வீரர்கள் 20 பேர் கலந்து கொண்டனர். இதில் தமிழகத்திலிருந்து தீபன் சக்கரவர்த்தி ஒருவர் மட்டும் கலந்து கொண்டார்.

பூம்சே கிரோகி ஆகிய இரு பிரிவுகளில் பங்கேற்ற தீபன் சக்கரவர்த்தி தலா ஒரு தங்கம், வெள்ளி பதக்கம் வென்றார். இவருடன் மேலும் 3 இந்திய வீரர்கள் தங்கம் வென்றனர். தங்கம் வென்ற தீபன் சக்கரவர்த்தி நேற்று தருமபுரி பேருந்து நிலையத்துக்கு வந்தபோது அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து பட்டாசு வெடித்து மாலை அணிவித்து பொன்னாடை போற்றி உறவினர்கள் பொதுமக்கள் பயிற்சியாளர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

தருமபுரி மாவட்ட டேக்வாண்டோ சங்க செயலாளர் மற்றும் பயிற்சியாளர் சுதாகர், திமுக முன்னாள் நகர மன்ற தலைவர் சிட்டிமுருகேசன், ஆகியோர் போட்டியில் தங்க வென்ற வீரருக்கு பொன்னாடை போற்றி இனிப்புகள் வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தனர்.

மேலும் தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் பாபு, உறவினர்கள், நண்பர்கள் பயிற்சியாளர்கள் பொதுமக்கள் என அனைவரும் தங்கம் வென்ற வீரனுக்கு பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

Tags:    

Similar News