உள்ளூர் செய்திகள்

மேட்டூரில் புதிதாக கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல் உள்ள சர்வேயர் அலுவலக கட்டிடத்தை படத்தில் காணலாம். 

பயன்பாட்டுக்கு வராமலேயே வீணாகும் சர்வேயர் அலுவலக கட்டிடம்

Published On 2023-04-11 14:21 IST   |   Update On 2023-04-11 14:21:00 IST
  • மேட்டூர் தாசில்தார் அலுவலக வளாகத்தில் குறுவட்ட அளவர் (சர்வேயர்) அலுவலகம் இயங்கி வருகிறது.
  • சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு கட்டபப்பட்ட இந்த புதிய கட்டிடத்தை, அப்போதைய தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

மேட்டூர்:

சேலம் மாவட்டம் மேட்டூர் தாசில்தார் அலுவலக வளாகத்தில் குறுவட்ட அளவர் (சர்வேயர்) அலுவலகம் இயங்கி வருகிறது. இதையடுத்து சர்வேயருக்கு குடியிருப்புடன் கூடிய அலுவலகம், மேட்டூர் காவலர் குடியிருப்பு எதிரே உள்ள இடத்தில் ரூ.15.36 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டது.

சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு கட்டபப்பட்ட இந்த புதிய கட்டிடத்தை, அப்போதைய தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். முதல்-அமைச்சர் திறந்து வைத்ததுடன் சரி, இன்று வரை இந்த கட்டிடம் பயன்பாட்டுக்கு வரவில்லை. இந்த அலுவலகத்தை யாரும் திறக்கவே இல்லை. அரசு நிதி ரூ.15 லட்சத்திற்கு மேல் செலவழித்து கட்டப்பட்ட, இந்த புதிய கட்டிடம் பயன்பாட்டுக்கு வராமலேயே வீணாகி சேதம் அடையும் நிலை ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து பொது மக்களிடம் கேட்டபோது, சர்வேயர் குடியிருப்புடன் கூடிய அலுவலகம், மேட்டூரில் இருக்கிறதா என்றால், இருக்கிறது ஆனால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும் என்கின்றனர். 

Tags:    

Similar News