உள்ளூர் செய்திகள்
கழிவுநீர் கால்வாய் அமைக்க ஆய்வு
- மழைக்காலங்களில் கழிவு நீர் வெளியேறுவதால் தொற்று நோய்களும் துர்நாற்றமும் ஏற்படுகிறது.
- அப்பகுதியில் உடனடியாக கழிவுநீர் கால்வாய் அமைக்க ஆய்வு செய்தனர்.
காவேரிபட்டினம்,
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டினம் ஒன்றியம் ஏர்ரஅள்ளி ஊராட்சி அண்ணா நகர் , ஸ்ரீராமுலு நகர் உள்ளிட்ட இடங்களில் கழிவுநீர் கால்வாய்களில் இருந்து மழைக்காலங்களில் கழிவு நீர் வெளியேறுவதால் தொற்று நோய்களும் துர்நாற்றமும் ஏற்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட அவை தலைவர் நாகராஜ் மற்றும் ஏர்ர அள்ளி ஊராட்சி மன்ற தலைவர் செந்தாமரை தமிழரசன் ஆகியோர் அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். பின்பு அப்பகுதியில் உடனடியாக கழிவுநீர் கால்வாய் அமைக்க ஆய்வு செய்தனர்.
அப்போது உடன் ஒன்றிய குழு துணை தலைவர் சசிகலா தசரா , முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.