உள்ளூர் செய்திகள்

பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்.

சேதமடைந்த நெற்பயிர்கள் கணக்கெடுக்கும் பணி

Published On 2023-02-05 10:01 GMT   |   Update On 2023-02-05 10:01 GMT
  • அனைத்து இடங்களிலும் அமோகமாக நெல் விளைச்சல் ஏற்பட்டு உள்ளது.
  • கனமழை காரணத்–தினால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளது.

திருவாரூர்:

திருவாரூர் அருகே வடகால், பின்னவாசல், ஓடாச்சேரி, கீழகூத்தங்குடி, வேப்பத்தாங்குடி ஆகிய பகுதிகளில் மழை நீரால் சூழ்ந்துள்ள விவசாய நெற்பயிர்களை திருவாரூர் எம்.எல்.ஏ. பூண்டி கே.கலைவாணன், மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் பூண்டி.கே.கலைவாணன் எம்எல்ஏ தெரிவித்ததாவது, இந்த ஆண்டு முன்பாகவே மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்தினால் காவிரி படுகை அனைத்து இடங்களிலும் அமோகமாக நெல் விளைச்சல் ஏற்பட்டு உள்ளது.

எதிர்பாராத விதமாக கடும்மழை பெய்த காரணத்தினால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மிகுந்த சேதமடைந்துள்ளது. இருபது நாட்களில் அறுவடை செய்ய வேண்டிய நெற்பயிர்களும் சேதமடைந்துள்ளது.

சேதமடைந்த நெற்பயிர்களை மாவட்ட வருவாய் நிர்வாகம் மற்றும் வேளாண்மைத்துறை மூலம் கணக்கெடுக்கம் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிந்ததும் தமிழக முதல்-அமைச்சரிடம் அறிக்கை சமர்பிக்கப்படும்.

இதற்கான நிவாரணம் பாதிக்கப்பட்ட விவசாயகளுக்கு வழங்கங்கிட தமிழக முதலவர் உரிய நடவடிக்கை எடுப்பார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இவ்வாய்வில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஏழுமலை, வேளாண்மை த்துறை உதவி இயக்குநர் ஹேமா ஹெப்சிமா நிர்மலா, தாசில்தார் நக்கீரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கருணாகரன், திருவாரூர் ஒன்றியக்குழு துணைத்தலைவர் துரை தியாகராஜன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் இருந்தனர்.

Tags:    

Similar News