உள்ளூர் செய்திகள்

விவசாயிகளுக்கு கொடுக்க தயாராக உள்ள மாங்கன்றுகளை படத்தில் காணலாம். 

கபிலர்மலை வட்டார விவசாயிகளுக்கு மானிய விலையில் பேட்டரி ஸ்பிரேயர் வழங்கல்

Published On 2023-03-30 07:32 GMT   |   Update On 2023-03-30 07:32 GMT
  • மானிய விலையில் 16 லிட்டர் கொள்ளளவு கொண்ட பேட்டரி ஸ்பிரேயர் வழங்கப்பட்டு வருகிறது.
  • இன்னும் 25 பேட்டரி ஸ்பிரேயர் இருப்பு உள்ளது.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார வேளாண்மை துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஆனங்கூர், வடகரையாத்தூர், சிறுநல்லிக்கோவில், சுள்ளிபாளையம், குப்பிரிக்காபாளையம் ஆகிய கிராமங்களுக்கு மானிய விலையில் 16 லிட்டர் கொள்ளளவு கொண்ட பேட்டரி ஸ்பிரேயர் வழங்கப்பட்டு வருகிறது.

இன்னும் 25 பேட்டரி ஸ்பிரேயர் இருப்பு உள்ளது. எனவே தேவைப்படும் விவசாயிகள் தங்களது ஆதார் அட்டை நகல், ரேசன் கார்டு நகல், சிட்டா, போட்டோ-1 ஆகியவற்றை கபிலர் மலை வேளாண்மை துறை அலுவலகத்தில் கொடுத்து வேளாண் துறையின் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் கபிலர்மலை வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகளுக்கு மாங்கன்றுகள் வழங்கப்பட உள்ளது. தேவையான விவசாயிகள் கபிலர்மலை வட்டார வேளாண்மை அலுவலகத்திற்கு வந்து பெற்று கொள்ளலாம்.

மாங்கன்றுகள் பெற ஆதார் நகல், ரேசன் நகல், சிட்டா, போட்டோ 2 ஆகியவற்றை வேளாண்மை அலுவலகத்தில் கொண்டு வந்து கொடுத்து மாங்கன்றுகளை பெற்றுக் கொள்ளலாம் என கபிலர்மலை வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News