விவசாயிகளுக்கு விலையில்லா ரசாயன உரங்கள் வழங்குவதற்கான படிவங்கள் வழங்கப்பட்டது.
விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் வழங்கல்
- குறுவை சிறப்பு தொகுப்பு திட்ட இடுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- கூட்டுறவு சங்க செயலாளர் பொறுப்பு அன்பழகன் வரவேற்றார்.
கபிஸ்தலம்:
பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே ஆதனூர் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்ட இடுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி ஊராட்சி தலைவர் சித்ரா மகாலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக கூட்டுறவு சங்க செயலாளர் பொறுப்பு அன்பழகன் அனைவரையும் வரவேற்றார்.
மாநில அயலக அணி தி.மு.க. துணை அமைப்பாளர் விஜயன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் விஜய் பிரசாத், ஒன்றிய கவுன்சிலர்கள் ஹாஜா மைதீன், ஆனந்த், மாவட்ட பிரதிநிதிகள் முருகேசன், கண்ணையன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் வினோத், ஒன்றிய இலக்கிய அணி அமைப்பாளர் இளையராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரும், பாபநாசம் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், திட்டக்குழு உறுப்பினருமான தாமரைச்செல்வன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விலையில்லா ரசாயன உரங்கள் வழங்கு வதற்கான படிவங்களை விவசாயிகளுக்கு வழங்கினார்.
இதில் ஏராளமான விவசாயிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.