உள்ளூர் செய்திகள்

கரும்பு தோட்டத்தில் வைக்கப்படும் தீயால் அருகில் உள்ள விவசாய தோட்டம் புகை மண்டலமாக மாறி இருப்பதை படத்தில் காணலாம்.

நாமகிரிபேட்டை அருகே கரும்பு கழிவுகள் தீ வைத்து எரிப்பு

Published On 2023-03-04 09:35 GMT   |   Update On 2023-03-04 09:35 GMT
  • விவசாயி ஒருவர் அவரது கரும்பு தோட்டத்தில் சறுகுகள், காய்ந்த இழைகளை அடிக்கடி தீ வைத்து எரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
  • கரும்பு தோட்டத்தில் தீ வைப்பதால் கிராம மக்கள் சுவாசிப்பதில் சிரமப்படுகின்றனர்.

ராசிபுரம்:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ளது அரியாக்குழந்தை புதூர் கிராமம். இங்குள்ள விவசாயி ஒருவர் அவரது கரும்பு தோட்டத்தில் சறுகுகள், காய்ந்த இழைகளை அடிக்கடி தீ வைத்து எரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்த தீயினால் வெளியேறும் கரும்புகை அந்த பகுதியில் வசிக்கும் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறது. இதுபற்றி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. விவசாயி தொடர்ந்து அவரது கரும்பு தோட்டத்தில் தீ வைப்பதால் கிராம மக்கள் சுவாசிப்பதில் சிரமப்படுகின்றனர். இதுபற்றி சம்பந்தப்பட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News