உள்ளூர் செய்திகள்

ஆனங்கூர் பகுதியில் பனிமூட்டத்தின் காரணமாக விவசாய பயிர்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

பரமத்தி வேலூர் பகுதியில் திடீர் பனி மூட்டம்

Published On 2022-12-15 09:04 GMT   |   Update On 2022-12-15 09:04 GMT
  • நாமக்கல் மாவட்டம் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை பனிமூட்டம் ஏற்பட்டது.
  • இந்த பனிப்பொழிவால் சாலைகள் மறைக்கப்பட்டி ருந்தது. விவசாய பயிர்களும் வெளியில் தெரியாமல் பனியால் மூடப்பட்டிருந்தது.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் , பொத்த னூர், பாண்ட மங்கலம், வெங்கரை, கொந்தளம்,சேளூர், பிலிக்கல்பாளையம், அய்யம்பாளையம், ஆனங்கூர், வடகரை யாத்தூர், ஜேடர்பாளையம் ,கொத்தமங்கலம், குரும்பல

மகாதேவி, ஜமீன் இளம்பள்ளி, சோழசிரா மணி, சுள்ளிப்பாளையம், குப்பிரிக்காபாளையம், மணியனூர், கந்தம்பாளை யம், ஒத்தக்கடை, பரமத்தி, கபிலர்மலை, திடுமல், தி. கவுண்டம்பாளையம் , பெருங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை பனிமூட்டம் ஏற்பட்டது.

இந்த பனிப்பொழிவால் சாலைகள் மறைக்கப்பட்டி ருந்தது. விவசாய பயிர்களும் வெளியில் தெரியாமல் பனியால் மூடப்பட்டிருந்தது. அதிக பனிப்பொழிவின் காரணமாக விவசாயிகள் தங்களது விவசாய தோட்டத்திற்கு சிரமப்பட்டு சென்றனர். அதேபோல் பணியின் காரணமாக அதிக குளிர் ஏற்பட்டது. அதிகாலையில் கூலி வேலைக்கு செல்லும் கூலி தொழிலாளர்கள் தங்களது உடலை வருத்திக் கொண்டு அவதிப்பட்டு சென்றனர். வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டப்படி சென்றது. நாளை, மார்கழி மாதத்தின் முதல் நாள் வரும் முன்னரே கார்த்திகை கடைசி நாளான இன்று கடும் பனி பொழிவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News