உள்ளூர் செய்திகள்

வனப்பகுதிகளில் 2 இடங்களில் திடீர் தீ விபத்து-பரபரப்பு

Published On 2023-03-09 10:11 GMT   |   Update On 2023-03-09 10:11 GMT
  • சென்னிமலை பகுதியில் வனப்பகுதியில் இது போல தீப்பிடிக்கும் சம்பவங்கள் கடந்த ஒரு மாதத்தில் பலமுறை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
  • இது போன் சம்பவங்கள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சென்னிமலை:

சென்னிமலை அருகே உள்ள மேலப்பாளையம் பகுதியில் வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த காட்டுப் பகுதியில் ஏரா ளமான மரங்கள் மற்றும் புல்வெளிகள் உள்ளன. இதில் சில பகுதிகளில் காய்ந்த புல் மற்றும் செடிகள் உள்ளது. தற்போது வெயி ளின் தாக்கம் அதிகமாக உள்ளது.

இந்தநிலையில் மேலப்பாளையம் காட்டுப்பகுதி யில் திடீரென தீப்பிடித்தது. அந்த தீப்பற்றி மற்ற பகுதிகளில் பரவி எரிந்து கொண்டு இருந்தது. இதை கணடு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தில் உள்ள வர்கள் உடனடியாக தீய ணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனடியாக சம்பவ இடத்து க்கு வந்து தண்ணீரை பீச்சி அடித்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.

இதே போல் சென்னிமலை- பெருந்துறை ரோடு ஈங்கூர் அருகே காய்ந்த புல்வெளிகள் மற்றும் செடி களில் திடீரென தீப்பற்றி எரிந்தது.

உடனே சென்னி மலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு நிலையத்தினர் தண்ணீரை பீச்சியடித்து தீ மேலும் பரவாமல் அணை த்தனர்.

இந்த 2 இடங்களிலும் நடந்த தீ விபத்தில் அதிர்ஷ்ட வசமாக பெரும் சேதம் ஏதும் ஏற்படவில்லை. சிறிது நேரம் தீயை அணைக்கா விட்டால் அருகே உள்ள மரங்களில் தீ பற்றி பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும்.

தீயணைப்பு வீரர்கள் சரியான நேரத்துக்கு வந்து தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்க ப்பட்டது.

ஒரே நாளில் சென்னி மலை பகுதியில் 2 இட ங்களில் அடுத்தடுத்து ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் சென்னிமலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சென்னிமலை பகுதியில் வனப்பகுதியில் இது போல தீப்பிடிக்கும் சம்பவங்கள் கடந்த ஒரு மாதத்தில் பலமுறை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது அதிக அளவில் வெயில் அடிப்பதால் ரோட்டோரம் உள்ள புல்வெளிகள் மரங்கள் காய்ந்து கிடப்பதால் தீ பற்றி இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் யாராவது தீ பற்ற வைத்து இருக்கலாமா என சந்தேகிக்கப்படுகிறது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வனப்பகுதியில் கண்காணித்து இது போன் சம்பவங்கள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

Tags:    

Similar News