உள்ளூர் செய்திகள்

போலீஸ் நிலையத்துக்கு தேடிவந்த டிக்டாக் காதலியை சரமாரியாக தாக்கிய சப்-இன்ஸ்பெக்டர்

Published On 2022-08-26 15:25 IST   |   Update On 2022-08-26 15:25:00 IST
  • சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்ற பின்னர் சோமசுந்தரம், காதலியான டிக்டாக் இளம்பெண்ணுடன் உள்ள தொடர்பை குறைத்தார்.
  • டிக்டாக் காதலியுடன் ஆட்டோவில் வந்த மற்றொரு பெண்ணும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

காஞ்சிபுரம்:

உத்திரமேரூர் அருகே உள்ள பெருநகர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சோமு என்கிற சோமசுந்தரம்.

இவர் காஞ்சிபுரம் போலீஸ் நிலையத்தில் தனிப்பிரிவில் தலைமை தலைவராக இருந்தபோதே 'திக் திக் டாக்' என்ற செல்போன் செயலில் ஆட்டம் போட்டு வீடியோ பதிவிட்டு டிக்டாக்கில் பிரபலமான தாயார் குளத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து அவர்களது நட்பு தொடர்ந்து வந்தது.

இதற்கிடையே சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்ற பின்னர் சோமசுந்தரம், காதலியான டிக்டாக் இளம்பெண்ணுடன் உள்ள தொடர்பை குறைத்தார். இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு டிக்டாக் காதலி, சப்-இன்ஸ்பெக்டர் சோமசுந்தரத்தை தேடி பெருநகர் போலீஸ் நிலையத்துக்கு வந்தார். மேலும் அவர் அங்கிருந்த போலீசார் முன்னிலையில் சப்-இன்ஸ்பெக்டர் சோமசுந்தரத்திடம் உரிமையுடன் பேசி கடும் வாக்குவாதம் செய்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் போலீஸ் நிலையத்திலேயே டிக்டாக் காதலியை சரமாரியாக தாக்கினார்.

மேலும் அவரை அழைத்து வந்த ஆட்டோ டிரைவருக்கும் 'பளார்' அறை விழுந்தது. இதனால் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த தாக்குதல் காட்சியை போலீஸ் நிலையத்தில் இருந்த ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.

தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

இந்த தாக்குதல் நடைபெற்றபோது டிக்டாக் காதலி தனது செல்போனில் படம் பிடித்ததாக தெரிகிறது. இதனால் கோபம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் டிக்டாக் காதலியை தாக்கி செல்பேனை பறித்து உள்ளார்.

இதனால் ஆவேசம் அடைந்த காதலி, செல்போனை கொடுக்கவில்லை என்றால் ஆடையை கழற்றி போட்டு போராட்டம் நடத்துவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து பயந்துபோன சப்-இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் செல்போனை திருப்பி கொடுத்து உள்ளார்.

இதேபோல் டிக்டாக் காதலியுடன் ஆட்டோவில் வந்த மற்றொரு பெண்ணும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

சப்-இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் தொடர்பை துண்டித்ததால் ஆத்திரம் அடைந்த டிக்டாக் காதலி தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வந்து உள்ளார்.

இதன் தொடர்ச்சியாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு டிக்டாக் காதலியின் தம்பி ஒருவரை வழக்கு ஒன்றில் போலீசில் மாட்டிவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆவேசம் அடைந்த டிக்டாக் காதலி, சப்-இன்ஸ்பெக்டர் சோமசுந்தரத்துடன் உள்ள தொடர்பு குறித்து அவரது மனைவி மற்றும் மாமனிடம் தெரிவித்து உள்ளார்.

இந்த தகராறில் கோபத்தில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், போலீஸ் நிலையத்துக்குள் வந்த மீண்டும் தகராறில் கோபத்தில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், போலீஸ் நிலையத்திற்குள் வந்து மீண்டும் தகராறில் ஈடுபட்ட காதலியை வசமாக கவனித்து அனுப்பி உள்ளார்.

இது தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News