உள்ளூர் செய்திகள்

வகுப்பறை கட்டிடம் இல்லாததால் மாணவர்கள் வராண்டாவில் அமர்ந்து படித்து வருவதை படத்தில் காணலாம்.

அரசு பள்ளியில் கழிப்பிடம் வசதி இல்லாததால் மாணவர்கள் அவதி

Published On 2023-07-10 07:30 GMT   |   Update On 2023-07-10 07:30 GMT
  • மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி, மதிய உணவு எல்லாம் சமைக்க அருகே கிராம சுகாதார மைய பகுதில் உள்ள அறையில் சமையல் செய்து மாணவர் களுக்கு வழங்கி வருகின்றனர்.
  • பள்ளி வகுப்பு அறைகட்டிடம், சமையல் கூடம், கழிப்பிடம் கட்ட வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி மருதாண்டப்பள்ளி ஊராட்ச்சியில் மருதாண்டப்பள்ளியில் அரசு ஆரம்பள்ளி இயங்கி வருகிறது. முதலில் தெலுங்கு பள்ளியாக இருந்த இந்தப் பள்ளி தமிழ் பள்ளியாக மாறி பல ஆண்டுகளாகிறது.

இந்தப் பள்ளி மருதாண்டப்பள்ளி, வரதாபுரம், டேம்கொத்தூர், ஒட்டர் பாளையம் ஆசிய பகுதியில் இருந்து 100-க்கு மேற்பட்ட மாணவர்கள் பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர்.

பள்ளியில் மூன்று அரசு சார்ந்த ஆசிரியரும், 2 ஆசிரியர் தனியார் மூலம் அமர்த்தபட்ட ஆசிரியர்கள் மொத்தம் 5 ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கல்வி அளித்து வருகின்றனர்.

பள்ளியில் மாணவர்கள், ஆசிரியர்கள் அதிகம் ஆனால் போதுமான வகுப்பறை இல்லை. பள்ளியில் இரண்டு கட்டிடம் அதில் ஒரு கட்டிடத்தில் 2 வகுப்பறை உள்ளது.

மற்றொரு கட்டிடத்தில் 2 வகுப்பறை, அதில் ஒரு கட்டிடம் பழுதானதால் அதை சில வருடம் முன்பு இடித்து விட்டு இன்னும் புதிய வகுப்பறை இல்லாததால் ஒரே கட்டிடத்தில் 2 வகுப்பறையில் அதே வகுப்பறை உள்ளேயும் வராண்டாவில் மாணவர்களுக்கு கல்வி அளித்து வருகின்றனர்.

பள்ளி மாணவர்களுக்கு கழிப்பறை பழுதானதால் அதை இடித்து தள்ளினர். மாணவர்கள் பள்ளி அருகே வெளி பகுதியில் சிறுநீர் கழிக்க செல்கின்றனர்.

சமையல் அறையும் பழுது என்பதால் அதையும் இடித்து விட்டனர். தற்போது மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி, மதிய உணவு எல்லாம் சமைக்க அருகே கிராம சுகாதார மைய பகுதில் உள்ள அறையில் சமையல் செய்து மாணவர்களுக்கு வழங்கி வருகின்றனர்.

அரசு அதிகாரிகளுக்கு தலைமை ஆசிரியர் மற்றும் எஸ்.எம்.சி. தலைவி நாகரத்தினா சித்தராஜ் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் சுதா வேணுவிடம் கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.

இந்தப் பள்ளிக்கு போர்கால அடிப்படையில் பள்ளி வகுப்பு அறைகட்டிடம், சமையல் கூடம், கழிப்பிடம் கட்ட வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Tags:    

Similar News