உள்ளூர் செய்திகள்

திருவையாறு காவிரி ஆற்று மணலில் நம்மாழ்வார் உருவப்படத்தை தத்ரூபமாக வரைந்த மாணவர்கள்.

மணலில் பூக்களால் தத்ரூபமாக 'நம்மாழ்வார்' உருவப்படத்தை வரைந்த மாணவர்கள்

Published On 2023-04-07 09:43 GMT   |   Update On 2023-04-07 09:43 GMT
  • பாரம்பரிய வேளாண்மையை முன்னெடுப்போம்.
  • சுமார் 5 மணி நேர உழைப்பில் நம்மாழ்வார் உருவப்படத்தை வரைந்தனர்.

தஞ்சாவூர்:

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் 85 -வது பிறந்தநாளை முன்னிட்டு சுற்றுச்சூழல் பாரம்பரிய உணவு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு காவிரி ஆற்று மணலில் நம்மாழ்வார் உருவப்படத்தை இலை தழைகள், பூக்களால் மணலில் வரைந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இதில் அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் , அரசு மேல்நிலைப்பள்ளி ஓவிய ஆசிரியர் மாரியப்பன் ஆகியோர் துணையோடு மாணவர்கள் நம்மாழ்வார் ஓவியத்தை தத்ரூபமாக வரைந்தனர்.

மேலும் வரையப்பட்ட நம்மாழ்வார் உருவப்படம் முன்பு மரம் வளர்ப்போம், சுற்றுச்சூழலை காப்போம் , சிறுதானிய உணவு வகைகளை உண்போம், பாரம்பரிய வேளாண்மையை முன்னெடுப்போம்.

பிளாஸ்டிக்கை அறவே தவிர்ப்போம் என்றும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இதில் ஏராளமான பள்ளி கல்லூரி மாணவர்கள் சுமார் 5 மணி நேர உழைப்பில் நம்மாழ்வார் உருவப் படத்தை வரைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News