உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு மனிதசங்கிலியில் கலந்துகொண்ட மாணவ-மாணவிகள்.

அரசியலமைப்பு தினம் உருவான நாள் தேசத்தலைவர்களின் வேடம் அணிந்து மாணவர்கள் விழிப்புணர்வு

Published On 2023-11-24 13:35 IST   |   Update On 2023-11-24 13:35:00 IST
  • ஆண்டு தோறும் நவம்பர் 26ம் தேதி இந்திய அரசியல் அமைப்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
  • இதனை முன்னிட்டு திண்டுக்கல்லில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது.

திண்டுக்கல்:

சுதந்திர இந்தியாவின் அரசியல் அமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டதை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் நவம்பர் 26ம் தேதி இந்திய அரசியல் அமைப்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1949 ஆம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1950 ஜனவரி 26 அன்று முதல் நடைமுறைக்கு வந்தது. அரசியலமைப்பு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட நாளை நாம் குடியரசு தினமாக கொண்டாடி வரு கிறோம். இந்திய அரசிய லமைப்பின் முக்கியத்து வத்தை வலியுறுத்தும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட தினமான நவம்பர் 26ம் நாளை அரசியலமைப்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனை முன்னிட்டு திண்டுக்கல்லில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது. பெரியார் சிலை முதல், வெள்ளை விநாயகர் கோயில் வரை மாணவர்கள் மனித சங்கிலியில் ஈடுபட்ட னர். இதில் மகாத்மா காந்தி, நேரு, அம்பேத்கர், பாரதியார், திப்புசுல்தான், சின்ன மருது, சுபாஷ் சந்திர போஸ், வீரபாண்டிய கட்டபொம்மன் உள்ளிட்ட பல்வேறு விடுதலைப் போராட்ட வீரர்கள் வேடமணிந்து பங்கேற்றனர்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம், கடமையை செய்வோம், உரிமையை கேட்போம், அடிப்படை உரிமை அனைவருக்கும் உரியது என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி மாணவர்கள் மனித சங்கிலி பேரணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News