உள்ளூர் செய்திகள்

பண்ருட்டி அருகே அரசு பள்ளியில் பிளஸ்-1 மாணவனை தாக்கிய மாணவர்கள்.

Published On 2023-02-09 14:40 IST   |   Update On 2023-02-09 14:40:00 IST
  • இதில் பிளஸ்-1 படிக்கும் மாணவனை அதே பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சேர்ந்து தாக்கியுள்ளனர்.
  • இதில் காயமடைந்த பிளஸ்-1 மாணவன் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகி ச்சைக்கு சேர்க்கப்பட்டான்

கடலூர்:

பண்ருட்டி அருகே பேர்பெரியான்குப்பம் கிராமத்தில் அரசினர் மேல்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து மாணவர்கள் வந்து படிக்கின்றனர். இதில் பிளஸ்-1 படிக்கும் மாணவனை அதே பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சேர்ந்து தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த பிளஸ்-1 மாணவன் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகி ச்சைக்கு சேர்க்கப்பட்டான். இது குறித்து மாணவன் கொடுத்த புகாரின் பேரில் மாணவர்கள் மீது முத்தாண்டிக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News