எலி பேஸ்ட் தின்று மாணவி தற்கொலை
- தமிழ்செல்விக்கு இருதயத்தில் ஓட்டை இருந்தது.
- இவருடைய தாய் சம்பாதிக்கும் பணம் மருத்துவ செலவிற்கே போதுமானதாக உள்ளது என்று எண்ணி தமிழ்செல்வி மன வேதனையில் காணப்ப ட்டார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், மாரண்ட அள்ளி அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகள் தமிழ்செல்வி.
இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இவருைடய தந்தை 2 வருடத்திற்கு முன்பு இறந்த நிலையில் தாய் சம்பாதிக்கும் பணத்தை வைத்து குடும்பம் நடத்தி வந்தனர்.
மேலும் தமிழ்செல்விக்கு இருதயத்தில் ஓட்டை இருந்தது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பார்த்து வந்தனர்.
மேலும் இவருடைய தாய் சம்பாதிக்கும் பணம் மருத்துவ செலவிற்கே போதுமானதாக உள்ளது என்று எண்ணி தமிழ்செல்வி மன வேதனையில் காணப்ப ட்டார்.
பின்னர் வீட்டில் உள்ள எலி பேஸ்டை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார். அக்கம் பக்கத்தினர் இவரை மீட்டு மாரண்ட அள்ளி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல்சிகிச்சை க்காக அங்கிருந்து சேலம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து மாரண்ட அள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.