உள்ளூர் செய்திகள்

சுகாதார சீர்கேடான நிலையில் உள்ள அரசு பள்ளி கழிப்பிடம்.

பள்ளிக் கழிவறைகளை சுத்தம் செய்யாவிட்டால் போராட்டம்பெற்றோர்கள் அறிவிப்பு

Published On 2023-02-18 12:06 IST   |   Update On 2023-02-18 12:06:00 IST
  • ஆர்.வெள்ளோடு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் பயன்படுத்தும் கழிவறைகள் பல மாதங்களாக தூய்மைப்படுத்த ப்படாமல்உள்ளது.
  • கழிப்பறையை சுத்தம் செய்து உரியமுறையில் பராமரிக்க வேண்டும். இல்லையெனில் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என தெரிவித்துள்ளனர்.

வடமதுரை:

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா ஆர்.வெள்ளோடு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் பயன்படுத்தும் கழிவறைகள் பல மாதங்களாக தூய்மைப்படுத்த ப்படாமல்உள்ளது.

இதனால் மாணவிகள் கழிவறைகளை பயன்படுத்தாமல் இயற்கை உபாதைகளுக்கு வெளியிடங்களை பயன்படுத்தும் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. மேலும் சில மாணவிகள் இயற்கை உபாதையை அடக்கிக் கொள்வதால் அவர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படும் சூழல் உள்ளது.

தொடக்க பள்ளிகளில் கூட கழிப்பிட வசதிகள் சிறந்த முறையில் செய்து கொடுக்கப்பட்டுள்ள நிலையில் மேல்நிலை ப்பள்ளி மாணவிகளுக்கு அசுத்தமான கழிப்பிடம் பெறும் தொற்று உருவாகும் இடமாக அமைந்துள்ளது.

நூற்றுக்கணக்கான மாணவிகள் படிக்கும் பள்ளியில் இதுபோன்ற ஒரு நிலை இருப்பது குறித்து அவர்கள் தங்கள் பெற்றோர்களிடம் கூறியதை தொடர்ந்து அவர்கள் அங்கு வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். எனவே கழிப்பறையை சுத்தம் செய்து உரியமுறையில் பராமரிக்க வேண்டும். இல்லையெனில் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என தெரிவித்துள்ளனர்.

குஜிலியம்பாறை, வடமதுரை, எரியோடு, அய்யலூர் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்க ப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் கழிப்பிடம் மற்றும் சுகாதார வசதிகள் கேள்விக்குறியாக உள்ளது. எனவே கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி மாணவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News