உள்ளூர் செய்திகள்

கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த துளசியம்மாள்.

மலேசியாவில் சிக்கி தவிக்கும் எனது மகனை மீட்டு தர வேண்டும்-கலெக்டரிடம் தாய் மனு

Published On 2023-03-22 16:02 IST   |   Update On 2023-03-22 16:02:00 IST
  • ஆன்லைனில் பார்த்த விளம்பரம் ஒன்றினை நம்பி ஒரு லட்ச ரூபாய் சம்பளத்திற்கு ஆசைப்பட்டு கடந்த டிசம்பர் மாதம் 7-ம்தேதி பெங்களூரிலிருந்து மலேசியாவிற்கு சென்றார்.
  • 15 நாட்கள் மட்டுமே வேலை பார்த்த நிலையில் பாஸ்போட், விசாவை பறித்து வைத்துக்கொண்டு உனக்கு சரியாக வேலை தெரியவில்லை.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள ஏ. சப்பாணிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் துளசியம்மாள் (வயது65) என்பவர் மலேசியாவில் உள்ள மகனை மீட்டு தரக்கோரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் ஏ. சப்பாணிப்பட்டி கிராமத்தில் வசித்து வருகிறேன். எனது மாதேஷ் (36) என்பவருக்கு திருமணமாகி திவ்யா (29) என்கிற மனைவியும், ஸ்ரீநிவாஸ் (7) என்ற குழந்தையும் இருக்கின்றனர். எனது மகன் மெக்கானிக்கல் டிப்ளமோ படித்து முடித்துள்ளார். இதனால் வெளிநாட்டில் வேலை செய்தால் அதிகம் சம்பாதிக்கலாம் என்கிற நோக்கத்தில் மலேசியாவுக்கு சென்றார். அங்கு மாதம் ரூ.1 லட்சம் சம்பளத்திற்கு ஆசைப்பட்டு தற்போது அவர் மலேசியாவில் தவித்து வருகிறார்.

பெங்களூருவில் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்த மாதேஸ், ஆன்லைனில் பார்த்த விளம்பரம் ஒன்றினை நம்பி ஒரு லட்ச ரூபாய் சம்பளத்திற்கு ஆசைப்பட்டு கடந்த டிசம்பர் மாதம் 7-ம்தேதி பெங்களூரிலிருந்து மலேசியாவிற்கு சென்றார்.

15 நாட்கள் மட்டுமே வேலை பார்த்த நிலையில் பாஸ்போட், விசா உள்ளிட்டவைகளை பறித்து வைத்துக்கொண்டு உனக்கு சரியாக வேலை தெரியவில்லை.

அதனால் 30 ஆயிரம் ரூபாய் மட்டுமே சம்பளம் தரமுடியும். ஒரு வருடத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடவேண்டும் என வேலைக்கு அழைத்து சென்றவர்கள் துன்புறுத்தியுள்ளார்.

இதனால் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் மலேசியாவிலுள்ள இந்திய தூதரகத்தில் இருந்து வருவதாக வாட்ஸ்அப் வழியாக எனது மகன் மாதேஸ் வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். இதனால் எனது மகனை மீட்டு தருமாறு கேட்டுகொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

Tags:    

Similar News