உள்ளூர் செய்திகள்

உணவை வீணாக்காதீர்கள்... 3000 கிமீ தூரம் விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொள்ளும் இளைஞர்கள்

Published On 2022-12-05 13:35 IST   |   Update On 2022-12-05 13:35:00 IST
  • இந்தியா-பாகிஸ்தான் எல்லையான வாகா வரை நடை பயணம் மேற்கொள்கின்றனர்
  • செல்லும் வழியில், பசியில் வாடும் நபர்களுக்கு உணவு வழங்குகின்றனர்.

மாமல்லபுரம்:

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியை சேர்ந்தவர் ஜானி (வயது 20), போட்டோகிராபர். இவரது நண்பர் பைந்தமிழ் (வயது19). இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் வேளாண்மை இன்ஜினியரிங் படித்து வருகிறார். இருவரும் உணவை வீணாக்குவதை தடுக்கும் விழிப்புணர்விற்காக காரைக்காலில் இருந்து இந்தியா-பாகிஸ்தான் எல்லையான வாகா வரையான 3 ஆயிரம் கி.மீ., நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை, ஆந்திரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், டெல்லி வழியாக வாகா சென்றடைய திட்டமிட்டு நடந்து செல்கிறார்கள்.

தங்களது நண்பர்கள் உதவியுடன் இப்பயணம் செல்வதாகவும், தாங்கள் செல்லும் வழியில், பசியில் வாடும் நபர்களுக்கு உணவு வழங்குவதாகவும் தெரிவித்தனர். இளம் வயதில் இது போன்ற நல்ல விஷயங்களுக்கு விழிப்புணர்வு நடைபயணம் செல்லும் இவர்களை மக்கள் பாராட்டி வருகின்றனர்.

Similar News