உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடி மாநகர ரவுண்டானாக்களில் வண்ண விளக்கு, நீரூற்றுகள் அமைக்க நடவடிக்கை - மேயர் ஜெகன் பெரியசாமி பேச்சு

Published On 2023-10-24 09:07 GMT   |   Update On 2023-10-24 09:07 GMT
  • சரஸ்வதி பூஜையை அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் ஆட்டோ, வேன் ஓட்டுநர்களுடன் மேயர் கொண்டாடினார்.
  • தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளை தூய்மையாகவும், மாசில்லா நகரமாகவும் மாற்றுவது மட்டுமல்லாமல் வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு வருகின்றது.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாநகர வடக்கு மண்டலத்தில் உள்ள கலைஞர் மேல் நிலை நீர் தேக்க தொட்டி, நுண் உரம் செய்யலாக்க மையத்தில் நடைபெற்ற சரஸ்வதி பூஜை யில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டார்.

அதிகாரிகள், அலுவ லர்கள், தூய்மை பணியா ளர்கள் மற்றும் ஆட்டோ, வேன் ஓட்டுநர்களுடன் கொண்டாடினார்.

அப்போது மேயர் பேசுகையில், தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளை தூய்மையாகவும், மாசில்லா நகரமாகவும் மாற்றுவது மட்டுமல்லாமல் வண்ண விளக்குகளாலும் அலங் கரிக்கப்பட்டு வருகின்றது.

அதன் தொடர்ச்சியாக ஏற்கனவே ஜெயராஜ் ரோடு மற்றும் 4-ம் கேட்டில் இருந்து செல்லும் பாதையில் அமைக்கப்பட்டுள்ளது போல் தற்போது கருப்பட்டி சொசைட்டி அருகே உள்ள பூங்காவிலும், சுகம் ஓட்டல் அருகில் உள்ள ரவுண்டா னாவிலும் வண்ண விளக்கும், நீரூற்றும் அமைக்க முடிவு செய்து பணிகள் விரைவில் ஆரம்பமாக உள்ளது.

மேலும் இது போல் அண்ணா சிலை பின்புறம், கலைஞர் அரங்கம் அருகில், மில்லர்புரம் மற்றும் எட்டையாபுரம் ஹவுசிங் போர்டு ரவுண்டானா ஆகிய பகுதிகளிலும் வரும் காலங்களில் நடைபெறும் என்று கூறினார்.

நிகழ்ச்சியில் மாநகர துணை செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான கீதாமுருகேசன், வட்ட முன்னாள் மாமன்ற உறுப்பி னர் ரவீந்திரன், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், பிரபாகரன், ஜாஸ்பர் மற்றும் சுகாதார அலுவலர் ஹரி கணேஷ் உட்பட அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News