உள்ளூர் செய்திகள்

மாநில நெல் திருவிழா- கருத்தரங்கம்

Published On 2022-08-12 14:51 IST   |   Update On 2022-08-12 14:51:00 IST
  • சீர்காழியில் நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை சார்பில் 8ம் ஆண்டு நெல் திருவிழா வரும் 14ம் தேதி காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை ஒரு நாள் நிகழ்ச்சியாக நடைபெற இருக்கிறது.
  • நமது மரபு நெல் ரகங்களை பயிரிடும் விவசாயிகளுக்காக சம்பா பட்டத்திற்கு தேவையான பாரம்பரிய நெல் ரகங்களான மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, சீரகசம்பா, கிச்சலி சம்பா, காட்டுயாணம் மோன்ற 10 விதமான நெல் ரகங்கள் ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை சார்பில் 8ம் ஆண்டு நெல் திருவிழா வரும் 14 ஆம் தேதி காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை ஒரு நாள் நிகழ்ச்சியாக நடைபெற இருக்கிறது.

இது குறித்து நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை செயலாளர் இரா.சுதாகர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

நமது மரபு நெல் ரகங்களை பயிரிடும் விவசாயிகளுக்காக சம்பா பட்டத்திற்கு தேவையான பாரம்பரிய நெல் ரகங்களான மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, சீரகசம்பா, கிச்சலி சம்பா, காட்டுயாணம் மோன்ற 10 விதமான நெல் ரகங்கள் ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

தொடர்ந்து நடத்தப்படும் இவ்விழா இந்தாண்டு சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள ஊழியன்காரன் தோப்பு சபாநாயக முதலியார் இந்து மேல்நிலை பள்ளியில் நடக்க இருக்கிறது.

விவசாயிகளுக்கு மரபு நெல் ரக விதைகள் வழங்கி விழாவை மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா தொடங்கி வைக்கிறார்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக துணைவேந்தர் கதிரேசன் சிறந்த முறையில் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கியும் சிறப்பிக்க உள்ளனர்.

மேலும் இயற்கை வேளாண்வ ல்லுனர்கள் சித்த மருத்துவர் தஞ்சை சித்தர் தமிழர் வேளாண்மை குறித்தும், ஞானபிரகாசம் தற்சார்பு பற்றியும், பாலகிருட்டிணன் இயற்கை உணவு குறித்தும் பேச உள்ளனர்.

சிவகாசி மாறன் பங்குபெறும் கருத்தரங்கம், இந்தியாவில் உள்ள 500க்கும் மேற்பட்ட மரபு நெல் ரகங்கள் கண்காட்சி, நஞ்சில்லா உணவு, பலா பழ ஆல்வா, பலா பழ ஐஸ் கிரீம், துணி பை, சித்தமருத்துவம், ஆகியவையும் காட்சிப் படுத்தப்படுகிறது.

இயற்கை விவசாயத்திற்கு தேவையான அனைத்து ஆலோசனை வழிமுறைகளையும் வழங்க உள்ளனர். நாட்டு காய்கறி விதைகள் விற்பனையும் நடைபெறும். விழாவில் பங்கேற்பவர்களுக்கு மதியம் பாரம்பரிய அரிசியில் செய்யப்பட்ட உணவுகள் வழங்கvப்படும் என கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News