உள்ளூர் செய்திகள்

மாநில ஸ்கேட்டிங் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற அக்காள்-தம்பி

Published On 2022-11-11 18:05 IST   |   Update On 2022-11-11 18:05:00 IST
  • சிறு வயதில் இருந்தே கடல் அலைச்சறுக்கு மற்றும் ஸ்கேட்டிங் மீது ஆர்வம் இருந்தது.
  • தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

மாமல்லபுரம்:

மாமல்லபுரம் மீனவர் குப்பம் பகுதியை சேர்ந்தவர் சுகந்தி. மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகள் கமலி (வயது13), மகன் ஷரீஸ் (வயது 9). கமலி 8ம் வகுப்பும், ஷரீஸ் 5ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

அக்காள், தம்பி இருவருக்கும் சிறு வயதில் இருந்தே கடல் அலைச்சறுக்கு மற்றும் ஸ்கேட்டிங் மீது ஆர்வம் இருந்தது. இதனால் தீவிர பயிற்சி மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டி சோழிங்கநல்லூரில் நடந்தது. இதில் இருவரும் அவர்களின் வயதிற்கான பிரிவில் சேர்ந்து விளையாடினர். இதில் அக்காள், தம்பி இருவரும் தங்கப்பதக்கம் வென்றனர். இதனால் அடுத்த மாதம் பெங்களூருவில் நடக்கவிருக்கும் தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். தொடர்ந்து சர்வதேச போட்டியில் கலந்து கொள்வதற்கு தமிழக அரசு உதவிட வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கையாக உள்ளது.

Similar News