உள்ளூர் செய்திகள்

திருவிழா மாலை ஆராதனை அருட்தந்தை இருதயசாமி தலைமையில் நடைபெற்ற காட்சி. 

ராதாபுரம் அருகே புனித ஆகத்தம்மாள் ஆலய திருவிழா

Published On 2023-02-19 09:20 GMT   |   Update On 2023-02-19 09:20 GMT
  • புனித ஆகத்தம்மாள் ஆலயம் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
  • புனித ஆகத்தம்மாள் சப்பரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

பணகுடி:

ராதாபுரம் அருகே ரம்மதபுரம் புனித ஆகத்தம்மாள் ஆலயம் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்ற சிற்றாலயமாகும்.

இங்கு ஆண்டுதோறும் 2 நாட்கள் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு திருவிழா மாலை ஆராதனை அருட்தந்தை இருதயசாமி தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து இரவு 11 மணிக்கு புனித ஆகத்தம்மாள் ரத வீதிகளில் சப்பரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார் பக்தர்கள் நேர்த்தி கடனாக உப்பு, மிளகு தூவியும் வழிபட்டனர். நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.விழா ஏற்பாடுகளை பங்குதந்தை ஸ்டார்லின் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News