உள்ளூர் செய்திகள்

பொன்னேரியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டி

Published On 2022-12-02 12:02 GMT   |   Update On 2022-12-02 12:02 GMT
  • வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
  • நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர் சுபத்ரா தேவி, உதவி தலைமை ஆசிரியர் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

பொன்னேரி:

பொன்னேரியில் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களிடையே திறமைகளை வெளிப்படுத்தும்விதமாக ஓட்டப்பந்தயம், லெமன் ஸ்பூன், பலூன் உடைத்தல், சிலம்பம், குத்துச்சண்டை உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர் சுபத்ரா தேவி, உதவி தலைமை ஆசிரியர் சுரேஷ், தமிழ்நாடு டாக்டர் ராதாகிருஷ்ணன் பட்டதாரி ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் காத்தவராயன், ஆசிரியர்கள் அர்ச்சுனன், நிர்மலா, நாராயணன், உடற்கல்வி ஆசிரியர் ஜெயராஜ், வட்டார மைய ஒருங்கிணைப்பாளர்கள் செந்தில், ஆனந்த், செபஸ்டின் , சிறப்பு பயிற்றுநர்கள் ஆசிரியர்கள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

Tags:    

Similar News