உள்ளூர் செய்திகள்

திருவொற்றியூர் எண்ணூர் விரைவுச் சாலையில் வாகனங்களின் வேகம் கண்காணிப்பு

Published On 2023-11-05 07:12 GMT   |   Update On 2023-11-05 07:12 GMT
  • சப் இன்ஸ்பெக்டர் பொன் குமார் ஸ்பீட்ரேடார் கருவி மூலம் அதிவேகத்தில் வரும் வாகனங்களை கண்காணித்தனர்.
  • சுமார் 200-க்கும் மேற்பட்ட வாகனங்களை நிறுத்தி போலீசார் எச்சரித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

திருவொற்றியூர்:

சென்னையில் வாகனங்களுக்கு வேக கட்டுப்பாடு நேற்று முதல் அமலுக்கு வந்து உள்ளது. மோட்டார் சைக்கிள்கள் 50 கிலோமீட்டர், ஆட்டோக்கள் 40 கி.மீட்டர், கார்கள் 60 கி.மீட்டர், கனரக வாகனங்கள் 50 கி.மீட்டர் வேகத்திலும், உட்புற சாலைகளில் அனைத்து வாகனங்களும் 30 கி.மீட்டர் வேகத்தில் செல்ல அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

இதையடுத்து போக்குவரத்து போலீசார் முக்கிய சாலைகளில் ஆங்காங்கே ஸ்பீட் ரேடார் கண்காணிப்பு கருவி மூலம் கண்காணித்து வருகிறார்கள். எண்ணூர் விரைவு சாலையில் திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் பகுதியில் போக்குவரத்து உதவி கமிஷனர் சீனிவாசன் மேற்பார்வையில் சப் இன்ஸ்பெக்டர் பொன் குமார் ஸ்பீட்ரேடார் கருவி மூலம் அதிவேகத்தில் வரும் வாகனங்களை கண்காணித்தனர்.

அப்போது அப்பகுதியில் வடக்கு மண்டலம் துணை கமிஷனர் குமார் ஆய்வு மேற்கொண்டார். முதல் நாளான நேற்று எண்ணூர் விரைவுச்சாலையில் அதிவேகத்தில் வந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட வாகனங்களை நிறுத்தி போலீசார் எச்சரித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இன்று முதல் அபராதம் விதிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர். அதிவேகத்தில் வாகனங்களை ஓட்டினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News