உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

ரெயில்வே ஊழியர்களுக்காக போடிக்கு நாளை சிறப்பு ரெயில் இயக்கம்

Published On 2023-03-29 05:44 GMT   |   Update On 2023-03-29 05:44 GMT
  • கட்டமைப்பு, சமிக்ஞை, பயணிகளுக்கான வசதி ஆகியவற்றை பார்வையிடுவதுடன் பணிபுரிவது குறித்த ஒத்திகையிலும் ஈடுபட உள்ளனர்.
  • மதுரை மற்றும் சென்னையில் இருந்து போடிக்கு விரைவில் ரெயில் இயக்க வாய்ப்புள்ள தாக ரெயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர்.

மேலசொக்கநாதபுரம்:

மதுரை-போடி ரெயில் கடந்த மே மாதம் 27-ந்தேதி முதல் தேனி வரை இயக்கப்பட்டு வருகிறது. 15 கி.மீ தூரமுடைய போடி வழித்தடத்தில் தற்போது பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ளன. ஆகவே போடி வரை ரெயிலை நீட்டித்து இயக்கு வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ள ப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக அங்கு நியமிக்கப்பட்ட ரெயில்வே ஊழியர்கள் நாளை போடிக்கு செல்ல உள்ளனர். இவர்களுடன் மற்ற அலுவலர்களும் செல்கின்றனர். இதற்காக தேனியில் இருந்து காலை 9.45 மணிக்கும், போடியில் இருந்து மாலை 5.30 மணிக்கும் தேனிக்கும் ரெயில்வே ஊழியர்களு க்கான சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.

போடியில் ரெயில்நிலையம் டெர்மினல் தன்மை யுடன் இருப்பதால் அங்குள்ள கட்டமைப்பு, சமிக்ஞை, பயணிகளுக்கான வசதி ஆகியவற்றை பார்வையிடுவதுடன் பணிபுரிவது குறித்த ஒத்திகையிலும் ஈடுபட உள்ளனர். பின்பு மாலை 5.30 மணிக்கு இதேரெயிலில் மதுரை கிளம்பி செல்கின்றனர்.

தண்டவாள ஆய்வு, சமிக்ஞை சோதனை, ஊழியர்களின் பணி ஒத்திகை போன்றவை அடுத்தடுத்து நடைபெறு வதால் மதுரை மற்றும் சென்னையில் இருந்து போடிக்கு விரைவில் ரெயில் இயக்க வாய்ப்புள்ள தாக ரெயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News