உள்ளூர் செய்திகள்

நரசாபூரில் இருந்து கோட்டயத்துக்கு கோவை வழியாக சிறப்பு ெரயில்

Published On 2022-11-13 09:00 GMT   |   Update On 2022-11-13 09:00 GMT
  • சபரிமலை பக்தர்கள் வசதிக்காக ரெயில் இயக்கப்படுகிறது.
  • வெள்ளிக்கிழமைகளில் காலை 5 மணிக்குப் புறப்படும் சிறப்பு ெரயில் மறுநாள் காலை 5.30 மணிக்கு கோட்டயத்தை சென்றடையும்.

கோவை,

சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக ஆந்திர மாநிலம் நரசாபூர், கேரள மாநிலம் கோட்டயம் இடையே கோவை வழியாக சிறப்பு ெரயில் இயக்கப்படுவதாக ெரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் கோட்ட ெரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆந்திர மாநிலம் நரசாபூரில் இருந்து நவம்பா் 18, 25 ஆகிய தேதிகளில் வெள்ளிக்கிழமைகளில் காலை 5 மணிக்குப் புறப்படும் சிறப்பு ெரயில் (எண்:07119) மறுநாள் காலை 5.30 மணிக்கு கோட்டயத்தை சென்றடையும்.

நவம்பா் 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் சனிக்கிழமைகளில் கோட்டயத்தில் இருந்து காலை 9.30 மணிக்குப் புறப்படும் சிறப்பு ெரயில் (எண்: 07120) மறுநாள் மாலை 4 மணிக்கு நரசாபூரை சென்றடையும்.

இந்த சிறப்பு ெரயிலில், ஏ.சி. இரண்டடுக்கு பெட்டி 2, மூன்றடுக்கு பெட்டி 1, படுக்கை வசதி பெட்டிகள் 11, இரண்டாம் வகுப்பு பெட்டிகள் 6, என, 22 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.

ெரயிலானது, எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, சித்தூா், திருப்பதி, ரேணிகுண்டா உள்ளிட்ட ெரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

நரசாபூர்-கோட்டயம் ெரயில் வெள்ளி அன்று இரவு 10.12-க்கும், கோட்டயம்-நரசாபூர் ெரயில் சனிக்கிழமை இரவு 10.30-க்கும் கோவை வந்தடையும் .

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News